search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி"

    • தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார்.
    • இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது.

    சென்னிமலை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுதத வனவாசி புதுப்பேட்டை காலனியைச் சேர்ந்தவர் கோபால் ( 53 ). இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமுதா. கோபால் சென்னி மலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் தனியாக தங்கி உள்ளார்.

    ஒரு தனியார் நிறுவன த்தில் கோபால் டிப்பர் லாரி ஓட்டி வந்தார். இந்நிலையில் கோபால் ஈங்கூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற டிப்பர் லாரியுடன் சென்றுள்ளார்.

    அப்போது அந்த தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார். அப்போது அங்கு மேல் பகுதியில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் டிப்பர் லாரியின் பகுதி உரசியது.

    இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை செல்லும் வழியிலேயே கோபால் இறந்து விட்டார். இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைக்கு சேர்ந்த 2 நாளில் சோகம்
    • 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார்.

    கோவை

    ஒடிசாவை சேர்ந்தவர் பஷந்த்நாயக் (வயது 19). இவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் அங்கு அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை.

    பின்னர் தனது அண்ணனுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    அங்கு சிறிய சிறிய வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று உணவகத்தில் கிரைண்டரில் அரிசி அரைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பசந்த்நாயக் மயங்கி கிரைண்டர் வயர் மீது விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தார்கள் ஓடி வந்தனர். பின்னர் பசந்த்நாயக்கை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து வடவள்ளி ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பஷந்த்நாயக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி வாலிபர், பள்ளி மாணவன் பலியானார்கள்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிதம்பரநாதன் (42) விவசாயி.

    சிதம்பரநாதன் பழைய ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலை களை வீட்டிலேயே செய்து வந்தார்.

    இந்நிலையில் சிதம்பர நாதன் வீட்டில் இருந்த பழைய ரேடியோ வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிதம்பரநாதன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் சிதம்பரநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரநாதன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்த–வர் பாபு. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு சபரிஸ்ரீ (13) என்ற மகன் உள்ளார். இவர் தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்தி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மாணவன் சபரிஸ்ரீ விடுமுறை நாட்களில் அருகே உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சபரிஸ்ரீ வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது மின்சார பிளக்கில் வயரை இணைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×